பாதயாத்திரையில் உற்சாகப்படுத்தும் பாடல்கள், நாமாவளிகள் உடைய நுால். விரதம் இருக்கும் பக்தர்கள் பயணத்தில் பாடுவதற்கு ஏற்றது.
ஒருவர் பாடுவதை தொடர்பவர் வாங்கி பாட ஏற்ற வகையில், ‘நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று- இது மனிதன் வாழ்க்கை. நினைத்ததை நினைத்தவாறே செய்து தருவது கந்தன் தரும் வெற்றி வாழ்க்கை. வெற்றி வேல்... வீரவேல்...’ என பக்தி அனுப வங்களுடன் முத்திரை பதித்துள்ளது.
சண்முக துதியுடன் தெய்வங்கள் மீதான பாடல், நாமாவளி, சரண கோஷங்கள் தரப்பட்டுள்ளன. பக்தர்கள் கையில் இருக்க வேண்டிய பாமாலை நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்