‘தினமலர்’ வாரமலர் உள்ளிட்ட இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
முதல் கதை, பேச்சு துணைக்கு ஏங்கும் பெண் பற்றியது. மனதில் ஒளிவு மறைவு வைக்காமல் பேசுகிறது. அருகில் உள்ளோர் அந்த பெண்ணை காயப்படுத்துகின்றனர். இந்த கதையை படித்தவுடன், கலகலவென பேசுவோரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. ‘வெள்ளிச் சொம்பு’ கதையை படிக்கும் போதே வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
இறுதியில் வரும் ஒரு பக்க கதைகள் வாசகனை இழுக்க முடியும் என நிரூபிக்கிறது. ‘சரணாலயம்’ கதையல்ல, இச்சமூகம் உணர வேண்டிய பாடம். கணவனின் பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்ப திட்டமிடும் மனைவி என்ற கதைக்கருவை உடையது. முடிவு புதுமையாக இருக்கிறது. சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
-– சிவா