அன்றாட வாழ்வு சிக்கலை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஊதாரி மகன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திய பின் உணர வைத்ததை, ‘வேரை சாய்க்கும் விழுதுகள்’ கதை எடுத்துரைக்கிறது. எமலோகத்தில் நடக்கும் திருட்டு பற்றிய கதையில் நகைச்சுவை நிறைந்துள்ளது.
கூட்டு குடும்பத்தில் உள்ள உளவியல் பிரச்னையை, ‘தாலாட்டு பாடவா’ கதை பேசுகிறது. கணவரின் புத்தகத்தில் மற்றொரு பெண்ணின் படத்தை பர்க்கும் மனைவியின் முடிவை, ‘புத்தகத்தில் ஒரு படம்’ கதை புனைந்துரைக்கிறது. வாழ்க்கை சிக்கலை மையமாக உடைய கதைகளின் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்