மோசடிக்காரர்களை மடக்க வாத்து எப்படி உதவுகிறது என விவரிக்கும் படக்கதை நுால்.
துப்பறியும் சுந்தரத்திற்கு பொருட்காட்சியில் அதிஷ்ட பரிசாக வாத்து கிடைக்கிறது. அது வாழ்க்கை போக்கை எப்படியெல்லாம் திசை திருப்பியது, காதலியை அவருடன் சேர்த்து வைத்ததா என கதையில் விடை காண்கிறது. வாத்து திருடி வந்த பர்சில் இருந்த தகவல், ஒரு பெண் காப்பாற்றப்பட்டதை கூறுகிறது.
கொள்ளை கூட்டத்திடம் சிக்கிய சுந்தரத்தை காப்பாற்ற வாத்து செய்த தந்திரத்தை விளக்குகிறது. மோசடி கும்பலிடம் சிக்கும் வாத்து தப்பிக்கும் சூட்சுமம் சுவாரசியத்துடன் சொல்லப்பட்டு உள்ளது. துப்பாக்கி முனையில் தப்பிக்க எடுத்த அவதாரத்தை கூறுகிறது. நகைச்சுவை ததும்ப படைக்கப்பட்டுள்ள நுால்.
– டி.எஸ்.ராயன்