மனித குல மேம்பாட்டை முன்வைத்துள்ள கதை நுால்.
கடவுள் மறுப்பு கொள்கையுடைய சத்தியசீலரோடு, இறை துாதர்கள் உரையாடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இறை துாதர்களை தேவலோகத்திற்கு கடத்தி, நிபந்தனைகளுடன் மாறுவேடத்தில் பூமிக்கு அழைத்து வந்து அவலங்களை புரிய வைப்பது போல் உள்ளது.
சொந்த வாரிசு செய்யும் தில்லுமுல்லு, கடவுள் பெயரால் அக்கிரமங்கள் கண்டு கதிகலங்குகிறது. உறவினரை விட, தான் சார்ந்த இயக்கம் விசுவாசமாக இருப்பதை அறிந்து செயல்படுகிறது கதாபாத்திரம். மனித குலத்தை அச்சுறுத்துவது ஆதிக்க வெறியே என்பதை தெளிவாக உணர்த்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்