சங்க கால நூலான திருமுருகாற்றுப்படைக்கு விளக்கம் தரும் கட்டுரைகள் அடங்கிய நுால்.
தமிழறிஞர் கி.வா.ஜ., ஆற்றிய சொற்பொழிவுகளோடு கூடுதலாக சமய கருத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
திருமுருகாற்றுப்படை அடிப்படையில் மாறுபட்ட தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. முருகக் கடவுளை பாட்டுத் தலைவனாகக் கொண்டு அறுபடை வீடு திருத்தலங்களின் சிறப்பு, ஆன்மிகச் செய்திகளை எளிய நடையில் அறிய தருகிறது.
மூலக் கருத்துகளை எளிய வகையில் பிற சமய மேற்கோள்களோடு இலக்கியச் செய்திகளையும் குறிப்பிட்டு விளக்கம் தந்திருக்கிறது. முருகன் உறையும் இடங்கள், திருநாமங்கள் இடம் பெற்றுள்ளன. பிற்சேர்க்கையாக அருஞ்சொற் பொருளும் தரப்பட்டு ள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு