ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்கள் பற்றிய தகவல்களை எடுத்துரைக்கும் நுால்.
ராமநாதபுரம் பகுதியின் பெயர் காரணத்தோடு துவங்குகிறது. சேதுபதிகள் என்பது யார் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சேதுபதி சீமையின் சிறப்புமிக்க கோவில்களை வரிசைப்படுத்துகிறது. உலகின் முதல் கோவில் உத்திரகோசமங்கை என தனிச்சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கோவில் பற்றி புதிதாக 120 தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. சாயல்குடி சொக்கநாத சுவாமி, நயினார் கோவில் தலங்கள் புராணத்தில் முக்கியத்துவம் பெறுவதை உணர்த்துகிறது. எளிதில் புரியும் நோக்கில், ஒவ்வொரு கோவில் தல புராணத்துடன் அமைந்துள்ள நுால்.
–ரெங்கா