தெனாலிராமன் கதைகளின் தொகுப்பு நுால்.
மன்னர் கிருஷ்ணதேவராயரின் அபிமானத்திற்கு உரிய தெனாலிராமன் சங்கடங்களை, சாதுார்யமாக வென்றதை மையமாக்கிய சிறுகதைகளி ன் தொகுப்பு நுால். தெனாலிராமனுக்கு தொந்தரவு தருவதை சமாளித்து அவையில் கவுரவம் பெறுவதை எடுத்துரைக்கிறது. மதி யூகத்தால் மன்னரே பாராட்டும்படி தெனாலிராமன் நடந்ததை கூறுகிறது.
எலி ஒழிக்க பூனை வளர்ப்பதே சரி என்ற போதனையை புத்திசாலித்தனத்தால் வென்றதை ‘பாலை குடிக்காத பூனை’ கதை நகைச்சுவை பொங்க சொல்கிறது. எல்லாம் மாயை என பிழைத்த ஞானிக்கு, நல்ல புத்தி சொல்லி தெளிய வைக்கிறது மற்றொரு கதை. சமயோசிதமே நல்வழிப் பாதை என அருமையாக எடுத்துரைக்கிறது சிறுவர்க ளுக்கு ஆர்வத்தை துாண்டும் கதைகளின் தொகுப்பு நுால்.
– டாக்டர் கார்முகிலோன்