அன்றாட பிரச்னைகளை மைய கருவாகக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
வஞ்சகத்தால் வாழ்வு இழந்த பெண்ணின் குரலை பதிவு செய்துள்ளது. துவண்ட உள்ளங்களுக்கு நம்பிக்கையான உறவு தேவை என்கிறது. சகோதர பாசத்தின் சிறப்பை வலியுறுத்துகிறது. மாற்றத்துக்கு அக்கறையுடன் விமர்சிக்க வேண்டும் என்கிறது. வல்லவரும் நல்லவராக இருப்பது அவசியம் என சுட்டுகிறது. நடுநிலையில் கடைப் பிடிக்க வேண்டிய அறத்தை வலியுறுத்துகிறது.
உண்மை, உழைப்புடன் வாழ்ந்தோரை தேடி கண்டறிந்து கற்றுக்கொள்ள சொல்கிறது. முதியோரின் அனுபவ பகிர்வை, இளைஞர்கள் பொறுமையுடன் கேட்க வலியுறுத்துகிறது. கொள்கை இல்லாதோரை தோலுரிக்கிறது. எல்லாரும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வழிகாட்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்