துன்பம் இல்லாத வாழ்வுக்கு வழிகாட்டும் நூல்.
செல்வம் ஈட்டி வெற்றி பெற மட்டுமின்றி வீடு பேறுக்கு வழி காட்டுகிறது. காமம், குரோதம், லோபம், மோகம், மதமாச்சரியத்தை வெல்ல வழி காட்டுகிறது. இரக்கம் உள்ள இதயம், இயற்கை இணைந்த அறிவு சேர்ந்தால் துன்பம் நீங்கும் என்கிறது. இதயத்தில் ஆன்மாவும், உலகு எங்கும் பரமாத்மாவும் பரவியுள்ளதாக கூறுகிறது.
காலம் தந்துள்ள 24 மணி நேரத்தை வீணாக்கக் கூடாது. அதிகாலை எழுபவர் வாழ்வு அதிவேகமாக உயரும். குழந்தையை நல்வழியில் பழக்குதல், தன்னை அறிந்து செயல்படுதல், புற உலகை அறிதல், குடும்ப மேன்மை அறிதல் வேண்டும் என்கிறது. பண்பற்றவர், பணக்காரரை நட்பு கொள்ளாமல் விலக்கினால், துன்பமின்றி வாழலாம் என கருத்தரைக்கும் நூல்.
- முனைவர் மா.கி.ரமணன்