மாறுபட்ட அமைப்புள்ள திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் பற்றிய நுால். தமிழக பாணியா, கேரள பாணியா என்ற குழப்பத்தை போக்கும் வகையில் தகவல்களுடன் உள்ளது.
இந்த கோவிலை பார்த்தாலே மனம் இனிக்கும். கோவிலின் வரலாறு மட்டுமல்ல, அதன் அமைப்பு, வழிபாட்டு முறை, சிற்பங்கள், கல்வெட்டுகள், பிரகாரங்கள் என அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து தகவல்கள் தருகிறது இந்த புத்தகம்.
இதை மற்ற கோவில்களுடன் ஒப்பிட்டதன் வழியாக, குமரியின் அனைத்து கோவில்களையும் வலம் வருவது போல் திருப்தி தருகிறது. இந்தளவு ஒரு கோவிலை அலசி ஆராய முடியுமா என வியப்பு தருகிறது. ஒவ்வொரு வாசகர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்.
– தி.செல்லப்பா