வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
வாழ்வில் குறிப்பிட்ட 45 நாட்களில் நடந்தவற்றை தொகுத்து எழுதப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாத்திற்கு சென்று வந்ததையும், ஏற்பட்ட அனுபவங்களையும், சந்தித்த மனிதர்களையும் பற்றி கூறுகிறது. அன்றாட டைரி குறிப்பாக விரிந்து வாழ்வை வெளிச்சமிட்டு காட்டுகிறது. அது, சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
எளிய நடையில் தன்னிலை விளக்கமாக பக்கங்கள் விரிகின்றன. ஒரு நாளில் இருந்து மற்றொரு நாளுக்கு நகரும் போது, வாழ்வு அடுக்குகளாக இருப்பது தனித்துவ அழகோடு விவரிக்கப்பட்டு உள்ளது. இறந்த பின் சொர்க்கம் போவது எவ்வளவு முக்கியமோ, வாழும் போது சந்தோஷமாக இருப்பது அதை விட முக்கியம் போன்ற வாசகம் அசை போட வைக்கிறது. வாழ்வு அனுபவம் சார்ந்த நாவல் நுால்.
– ஊஞ்சல் பிரபு