சமூகத்தில் பாலியல் ஒழுக்க நிலை குறித்த கேள்விகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
குள்ள உருவம் உள்ள ஒருவன் வினோத சிந்தனைக்கு உள்ளாகிறான். உலகிலே மிகுந்த உயரமுள்ளவனாக, அதிக சக்தியுள்ளவனாக கருத துவங்குகிறான். அது பெண்களுடனான உறவில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
உயரம் குறைந்த குள்ளன் வாழ்வில் அதையொட்டி நிகழ்வதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ளது. கசப்பான காதல் நிகழ்வை பற்றியும் கூறுகிறது.
அன்றாட வாழ்வில் அறைக்குள் நடக்கும் சம்பவங்களில், அதிகாரம் எந்த வகையில் எல்லாம் ஆட்டம் போடுகிறது என்பதாக விரிகிறது. வாழ்வில் பாலியல் ஒழுக்கம் சார்ந்து எழும் கேள் விகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
– ஒளி