தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வறண்ட பிரதேச மக்கள் வாழ்வை மையமாக உடைய சிறுகதை தொகுப்பு நுால்.
பிழைப்புக்காக ஆடுகளோடு காவிரி ஆற்றின் பாசன பகுதியில் வாழ்வதை படம் பிடிக்கிறது. மேய்ச்சல் நிலத்தில் நடக்கும் வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறது. ஆட்டுக் கிடையில் எழும் கழிவுகளான புழுக்கை வாசனை, குட்டிகளின் சத்தம் என கலை அனுபவமாய் பளிச்சிடுகிறது.
அன்றாட வாழ்வை நகர்த்துவது, அதில் ஏற்படும் சிக்கல்கள், விடுக்க நடக்கும் போராட்டம் என சுவாரசியம் குன்றாமல் பதிவாகியுள்ளது. தற்போதைய அரசியல், பொருளாதார நிலையில் ஆடு மேய்த்து வாழும் மக்கள் சந்திக்கும் சிக்கல்களை மிகுந்த பொறுப்புடன் வெளிப்படுத்துகிறது. அந்த மக்களுக்கான பண்பாடு, கலாசார அடையாளத்தை வெளிப்படுத்தும் தொகுப்பு நுால்.
– ராம்