வழிபாட்டிற்குரிய தோத்திரப் பாடல்கள் மற்றும் பெரிய -புராணம் தோன்றிய வரலாற்றை கூறும் நுால்.
சிவ புராணம், திருத்தொண்டத்தொகை, சிவபெருமான் துதி, சுப்ரமண்யர் துதி, அம்மை துதி, திருமால் துதி, திருமகள் துதி, பிரம்மதேவர் துதி, சரசுவதி என துதிகளை கூறுகிறது. பெரிய புராணம் தோன்றிய வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ளது. அறுபத்திமூன்று நாயன்மார் பிறந்த ஊர், குலம், காலம், முக்தியடைந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
பாடல் பெற்ற திருத்தலங்கள், பாடியோர், பதிகங்களின் தொகையை தொகுத்து கூறுகிறது. திருத்தல வகைகளுடன் அவற்றின் பட்டியல் தரப்பட்டுள்ளது. திருத்தலங்களின் அபிஷேக பொருட்கள் பெயர் மற்றும் பலன்கள் கூறப்பட்டு உள்ளன. சைவ பக்தர்களுக்கு உதவும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து