ஜாதி வெறி, வாழ்க்கையை நரகமாக்கும் என்பதை சுட்டிக்காட்டும் கதை நுால்.
ஜாதி வெறி கொண்டவர், மகன் மற்றொரு ஜாதி பெண்ணை விரும்புவதை எதிர்க்கிறார். அதனால் மாயமாகும் மகனை தேடுவதாக தொடங்குகிறது கதை. ஜாதி வெறியின் உச்சக்கட்டம் பேசப்பட்டுள்ளது. பின் ஞானத்தால் தவறை உணர்கிறார் அந்த தந்தை. பின்னர் நடக்கும் நிகழ்வுகளுடன் அறிவுரையும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நட்புக்கு உள்ள முக்கியம் கதை முழுதும் கூறப்பட்டுள்ளது. ஏழைகள் வாழ்க்கையை படம் பிடிக்கிறது. இந்த காலத்திற்கு ஜாதி தேவையில்லை; அது எப்போதும் துன்பத்தை மட்டுமே தரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனிதநேயம் அவசியம் என்பதை மையப்படுத்திய கதை நுால்.
– முகில்குமரன்