குலதெய்வ வழிபாட்டை உயர்த்தி கோபுரமாய் நிறுத்தும் நுால்.
குலதெய்வம் சேலைக்காரி அம்மன் மீது பாடும் வகையில் உள்ளது. எண்சீர், எழுசீர் விருத்தப் பாக்களாக அமைந்துள்ளது. தேனினும் இனிய சுவையும், பக்தியுடன் அகம் குழைவும், ஆணவம் அற்ற பணிவும், கவிதையின் சந்தச்சுவையும் படிப்போருக்கு புதிய உணர்வை தரும்.
‘அன்பு விழி கொண்ட அன்னையே, அகத்துள் ஒளி தரும் உன்னையே போற்றினேன்... என்னிடத்தில் குறை கண்டால் நீக்குவாய்’ என்று வேண்டுதல் செய்யப்பட்டுள்ளது. விக்கினம் தகர்க்கும் விசயை, காரிருள் நீக்கும் கதிரொளி என்றெல்லாம் போற்றப்பட்டுள்ளது. அம்பிகையை போற்றும் துதிப்பாடல்கள் உடைய நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்