‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவாக நடத்தப்பட்ட சிறுகதை போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதைகளின் தொகுப்பு. இது, புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து, சமூகத்தை சுட்டிக்காட்டும் கதைகளை வாசகர்களிடம் சேர்க்கிறது.
மனித உறவு, குடும்ப பாசம், நெறி, ஒழுக்கம், சமூக நியாயம், ஏழை – பணக்கார வேறுபாடு, பெண்களின் நிலை, அன்பு, தியாகம், மனித உணர்வுகள், வாழ்க்கை சிக்கல்கள், சமூகத்துக்கு பாடமாக அமையும் நிகழ்வுகளை சித்தரிக்கிறது.
எளிதில் வாசிக்கும் வகையில் பன்முக சொற்பிரயோகங்களுடன் நெகிழ்வாக அமைந்துள்ளன. சிறுகதைகளின் வழியாக உணர்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது.
பொதுவாக மனித உறவுகள், சமூக நிலைகள், காதல், விருப்பங்கள், கலாசாரம் மற்றும் மனோதத்துவ அம்சங்களை துவங்கிய கதை வரிசைகள் அடங்கியுள்ளன. தனித்துவ கருத்துகளுடன் விறுவிறுப்புடன் உள்ளன. உளவியல் மாற்றங்கள், சமூக சூழல் பற்றிய நுணுக்கமான பார்வையுடன் உள்ளன.
மன அழுத்தம், நிராசை, நம்பிக்கை இழப்பு உணர்வுகளை மிக நுட்பமாக விவரிக்கின்றன. தமிழகத்தின் மன நிலையை வெளிப் படுத்துகின்றன.
பன்னாட்டு சிறுகதை படைப்புகளின் சாயல்களை கொண்டுள்ளன. தனித்த பார்வையுள்ள சிறுகதைகளை விரும்புவோருக்கு சிறப்பான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.
மாணவர்கள், ரசிகர்கள், ஆசிரியர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு உகந்தது. ஆழ்ந்து, விரிவான, உணர்ச்சிமயமான சம்பவங்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாசகர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கும் நுால்.
– இளங்கோவன்