சங்க இலக்கியத்தில் 100 பாடல்களுக்கு புதுமையாக விளக்கம் தரும் நுால். மறுபதிப்பாக மலர்ந்துள்ளது.
ஒவ்வொரு பாடலுக்கும் கவிதை நடையில் விளக்கம் தந்துள்ளது. பொருத்தமான காட்சிகளை சித்தரிக்கும் வண்ண ஓவியங்கள் புகழ்பெற்ற ஓவியர்களால் வரையப்பட்டுள்ளன. சங்க இலக்கிய பாடல்களை காட்சிமயமாக முன்வைக்கிறது. மூலப்பாடல்களை அறிமுகம் செய்கிறது.
இறுதியாக தொடர்ச்சியாக பொருள் கொள்ளத்தக்க வகையில், 11 பாடல்களை இணைத்து ஒரு தலைக்காதல் என்ற சுவையுடன் குறுங்காவியம் உருவாக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கிய பாடல்களை புரிந்து, பொருள் கொள்ள வசதியாக சொற்பொருள் விளக்கம் தனித்தனியாக தரப்பட்டுள்ளது. சங்க இலக்கிய பாடல்களை காட்சியாக சித்தரிக்கும் கவிதை நடையில் அமைந்துள்ள நுால்.
– மதி