மரபணு சார்ந்த தகவல் புரட்சி குறித்து பேசும் நுால்.
மரபணுவின் மாற்றங்கள், உள்ளிருக்கும் பொறியியல், வணிகம் குறித்து, 21 கட்டுரைகள் உள்ளன. மரபணு ஆராய்ச்சி உருவான விபரம் கவனிக்கச் செய்கிறது. மரபணு மாற்றப்பட்ட உயிரினம் குறித்த தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன. வணிகத்திற்கான மரபணு மாற்று உணவின் இன்றைய நிலையை பிரதிபலிக்கிறது.
மரபணு மாற்ற உணவு மனிதனுக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை விமர்சன ரீதியாக விவரிக்கிறது. பசுமைப் புரட்சியின் அலங்கோலம், மரபணு மாற்றப்பட்ட தாவரம் பற்றிய செய்திகள் உண்மை நிலையை எடுத்துக் காட்டுகின்றன. மரபணு பொறியியலின் ஒழுங்குமுறை பற்றிய செய்திகளும் சொல்லப்பட்டு உள்ளன. மரபணு குறித்த சித்திரத்தை செதுக்கும் நுால்.
– ஊஞ்சல் பிரபு