மகாபாரத கிளைக்கதையில் பாஞ்சாலத்து இளவரசி சிகண்டினி பற்றிய நுால்.
காசிநாட்டு இளவரசி அம்பையின் மறுபிறவியாக சிகண்டினியை குறிப்பிட்டு கதை நகர்கிறது. மகாபாரதத்தில் பீஷ்மர், அம்பை தொடர்பு விரிவாக இடம் பெற்றுள்ளது. பாஞ்சால தேசம், அஸ்தினாபுரப் பேரரசு, குரு வம்சம், அம்பை கதை மற்றும் குருசேத்திரப் போர் தரப்பட்டுள்ளன.
பெண்ணாகப் பிறந்த சிகண்டினி, ஆணாக மாறுவதற்கு காரணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. குருசேத்திர போரில் பீஷ்மரை வீழ்த்துவது விறுவிறுப்புடன் சொல்லப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் சிகண்டினியின் மனவுறுதி எடுத்து காட்டப்பட்டுள்ளது. சிகண்டினியின் போராட்டங்கள் நிறைந்த புனைவை எளிய உரையாடல்களோடு காட்சிப்படுத்தும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு