எளிய மனிதர்களை கதை மாந்தர்களாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
வாழ்வில் அன்றாடம் கடந்து செல்லும் மாந்தர்களே கதாபாத்திரங்களாக உலவுகின்றன. வீடும், வீடு சார்ந்த மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், பலவீனங்கள், நிறை குறைகள், எதிர்பார்ப்புகள் என உண்மைக்கு நெருக்கமாக வெளிப்படுகிறது. அது கதையோடு ஒன்றச் செய்கிறது.
தொகுப்பில் 13 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. முடிவுகள் எப்படி இருக்கும் என யோசிக்க முடியாத அளவு திருப்பங்களும், பரவசங்களும் நிரம்பியிருக்கின்றன. பெண்கள் உள்ளும் புறமும் சந்திக்கும் சிக்கல்களையும், உரிய தீர்வையும் சுவைபட முன்வைக்கிறது. அதிர்வுகளையும், சிந்தனையையும் ஏற்படுத்தும் சிறுகதை நுால்.
– ஊஞ்சல் பிரபு