இந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படங்களை அறிமுகம் செய்யும் நுால். மொத்தம், 250 படங்கள் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பல காலக்கட்டங்களில் வெளியான திரைப்படங்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. மசாலா படங்களை தாண்டி அனுபவ பாடம் உடைய படங்களை அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு படத்தின் மையக்கருத்து, கதை சுருக்கம் மற்றும் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது.
புத்தகத்தை படித்தவுடன் அந்தந்த திரைப்படங்களை பார்த்து ரசிக்க ஆர்வம் ஏற்படுகிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், பஞ்சாபி என பல மொழிகளில் சிறந்த படங்களையும் தொகுத்து தருகிறது. அவற்றின் மீதான ரசனையை வெளிப் படுத்துகிறது. பாடங்கள் கற்பிக்கும் திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நுால்.
– மதி