கி .ஆ.பெ.விசுவநாதம் வெளியிட்ட தமிழர் நாடு இதழ்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். இதழ்களில் இடம் பெற்றிருந்த தலையங்க கட்டுரை துவங்கி, துணுக்கு செய்திகள் வரை இரண்டு பாகங்களாக உள்ளன.
தமிழகத்தில் விழிப்புணர்வாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழர் நாடு என்ற இதழை வெளியிட்டார். இதில், 1949 துவங்கி, 1951 வரை வெளிவந்த, 24 இதழ் கட்டுரை மற்றும் செய்திகள் இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.
பழைய இதழ்களில் இடம் பெற்ற தலையங்கம், துணுக்கு செய்திகள், மொழி, இன, அரசியல் சார்ந்த விமர்சன கட்டுரைகள், இலக்கியம், கவிதை என பல வகைமையும் உள்ளன. இதழ் வெளியான காலக்கட்டத்தில் தமிழகத்தின் நிலையை அறிய உதவுகிறது. தமிழ் இதழ்கள் குறித்து ஆய்வுக்கு உதவும் நுால்.
– ஒளி