அன்பு, பாசத்தை முன்நிறுத்தி காதல் கலந்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
முக்கிய கதாபாத்திரமாக வாசுவை குறிப்பிட்டுள்ளது. காதலை கைவிட மனமின்றி மனைவியை அரவணைத்தபடி ஞானியைப் போல் வாழ முயல்கிறான் வாசு. இயல்பை மீறிய தருணத்தில் பாதிப்பை எதிர்கொள்கிறான். விதியை மீற முடியாமல் தவிக்கிறான்.
அவன் அக்கா திருமணம் வேண்டாம் என ஆன்மிகப் பாதையில் போக முடிவெடுக்கிறாள். அப்போது, நிர்ப்பந்தம் காரணமாக திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். அதனால் விபரீதத்தை எதிர்கொள்கிறாள். இதுபோல் வாழ்க்கை ஒரு புதிராக மாறி பயணிப்பதை சித்தரிக்கிறது. மனதில் உதிக்கும் எண்ணமே மனிதர்களை வாழச் செய்கிறது. நம்பிக்கையான எண்ணமே வாழ்வுக்கு உரம் என உணர்த்தும் நுால்.
– ஊஞ்சல் பிரபு