மனித நேயம், ஜாதி, மதமற்ற சமுதாயம் காண வலியுறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
தீயதை செய்தால் தண்டிக்கப்படு வோம் என்பதை குற்றங்கள் வழியாக உணர்த்துகிறது. திருமணத்தை மையப்படுத்தி நகரும் கதையில் மனப்பொருத்தம் தான் பிரதானம் என சுட்டிக்காட்டு கிறது. காக்கும் கடமை, வேளாண் குடும்பம் உள்ளிட்ட கதைகளில் கருவும், சொல்லும் விதமும் தெளிந்த நீரோட்டமாக ஒன்றி போக வைக்கின்றன.
புரிதல் மந்திரம், ஏமாற்றும் காதல், பனி விலகட்டும், இனிக்கும் விவசாயம், மிரட்டிய பேய், உப்பில் கரைந்தவள் என்ற தலைப்புகள் வசீகரமாக இருக்கின்றன . திருப்பங்களை வலிந்து திணிக்காமல், சீரான கதை ஓட்டத்துடன் படைக்கப்பட்டுள்ளன. ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கதைகளின் தொகுப்பு நுால்.
-– ஊஞ்சல் பிரபு