மனித வாழ்வோடு பின்னி பிணைந்த மூன்று குறுநாவல்களின் தொகுப்பு நுால்.
ஊர்ப்புறங்களில் ஜாதி பாகுபாடு, குடும்ப பிரச்னை என சீர்குலைவுகளை விவரிக்கிறது, ‘மொட்டை என்றொரு மாணிக்கம்’ என்ற நாவல். இதில், மனித இறப்பால் ஏற்படும் துயரம் வெளிப்படுகிறது. நில உரிமையாளருக்கும், வேலை செய்பவருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை, ‘சலக்கால்’ கதை விவரிக்கிறது.
விவசாயம் சரியும் போது, அதை நம்பி இருப்போர், கால்நடைகள், தொழில்முறை நண்பர்கள் பாதிக்கப்படுவது குறித்து பேசுகிறது. ரியல் எஸ்டேட் தொழில் கோலோச்சுவதை, விவசாய வாழ்நிலையுடன் பேசுகிறது. ஆசிரியர்களின் இயல்பான வாழ்வை, ‘கற்றுச்சொல்லிகள்’ நாவல் சுவாரசியமாக தருகிறது. கோவை வட்டார மொழியில் மனங்களை படம் பிடித்து காட்டும் குறுநாவல் நுால்.
– டி.எஸ்.ராயன்