இலக்கியம், சமயம், மொழி, பண்பாடு போன்றவை தொடர்பான கட்டுரைகள் அடங்கிய நுால்.
மலைவாழ் மக்களால் பின்பற்றப்பட்ட வேலன் வெறியாடல் மற்றும் வழிபாட்டு நடைமுறைகளை விளக்குகிறது. நீர் மேலாண்மை, மொழியுணர்வு, தனிமனித ஒழுக்கத்தில் நிலவிய பண்பாட்டு சூழல்களை ஒப்பிட்டு சறுக்கல்களை சுட்டிக்காட்டுகிறது.
பரிபாடலில் வைகையாற்று பெருமை, சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வழக்காடல், மானிட உறவுகளில் கம்பர் வெளிப்படுத்தும் ஒழுக்க நெறிகள், திருப்பாவையில் அருள், நாலடியார் பாடல்களில் வாழ்வியல் என எடுத்துக் காட்டுகிறது.
பேதைமைகளால் ஏற்பட்ட பாதகங்களையும் துணிவோடு சுட்டிக் காட்டுகிறது. இலக்கியத்தில் மானிடவியல் கூறுகளை கூர்மையாக ஆய்ந்துள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு