தமிழ் இலக்கியத்தில் பல காலகட்டங்களில் எழுதப்பட்ட ஆக்கங்களை அறிமுகம் செய்யும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
பழந்தமிழ் இலக்கியம் முதல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பின் இணையத்தில் எழுதப் பட்ட பல படைப்புகளை குறிப்பிடுகிறது. திருக்குறளில் உள்ள கருத்துகளை தவறாக பொருள் கொள்வதை விளக்கி ஒரு கட்டுரை அமைந்துள்ளது. போர்க்குணம் மிக்க அழகிய கவிதைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனையுடன் கருத்துகளை தாங்கியுள்ள படைப்புகளை தரும் பெண் கவிஞர்கள் குறித்த விவாதம், நவீன சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. மக்கள் வாழ்வு குறித்து சிந்தித்து, வளர்ச்சி நோக்கிய படைப்புகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டு உள்ளது. தமிழில் புதிய சிந்தனைகள் பற்றிய நுால்.
– மதி