இலக்கியச் சோலை இதழில் வெளி வந்த அறிஞர்களின் வாழ்க்கை சுருக்கம் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. தனித்தன்மை வெளிப்படும் வகையில் அமைந்துள்ளது. 
 நகர்ந்தால் தான் நதி அழகு. வளர்ந்தால் தான் செடி அழகு. முயன்றால் தான் மனிதன் அழகு போன்ற கவிதைகள் அங்கங்கே விதைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர், குழந்தை இலக்கியப் படைப்பாளி, எழுத்தாளர், கவிஞர் என அறிமுகம் செய்கிறது. 
 எதிர்ப்பு வலுக்கிறது என்றால் அது வெறுப்பின் அறிகுறி அல்ல; வளர்ச்சியின் அறிகுறி போன்ற நம்பிக்கை வாசகங்களை அள்ளித் தெளிக்கிறது. இலக்கியம், சமூகம், பொதுத்தொண்டு என பல நிலைகளில் சாதனை படைத்த அறிஞர்களின் வாழ்க்கை குறிப்புடன் அமைந்துள்ள புத்தகம். 
 – முகிலை ராசபாண்டியன்