மன மோதல்களை தவிர்த்து சிந்தனையை துாண்டும் நுால்.
கடவுளுக்கு ஊழியம் செய்வோர் சிந்தனையை நிகழ்வுகள் வழியாக கூறுகிறது. இரண்டு பேர் சண்டையிட்டால், வழக்கறிஞருக்கு கிடைக்கும் ஆதாயத்தை குறிப்பிடுகிறது. தம்பதியருக்குள் முரண் தீர்க்க, மனைவி வழியில் கணவர் செல்ல வேண்டும் என்கிறது. சேமிப்பதால் கிடைக்கும் பலன், துாண்டுதலை எடுத்துரைக்கிறது.
‘ஒருவரை கொலை செய்தால் வில்லன்; ஓராயிரம் பேரை கொலை செய்தால் கதாநாயகன்’ என தமிழ் சினிமாவை கிண்டலடிக்கிறது. வெற்றி பெறுவதை விட, அதை தக்க வைப்பதே பெரிய விஷயம் என்கிறது. ஒரு ஆண் பெரிய உரையில் சொல்வதை, பெண் ஒரு பெருமூச்சில் சொல்லிவிடுவாள் என, குடும்ப சிக்கலை கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்