தெளிவான சிந்தனையை விதைத்து முற்போக்கான எண்ணத்தை வளர்க்கும் நுால்.
உணர்வுகளை எப்படி கையாள வேண்டும் என எடுத்துரைக்கிறது. வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் பண்புகளை கூறுகிறது. அனுபவம் மனிதனை செம்மைப்படுத்தும் என நம்பிக்கை ஊட்டுகிறது. வெற்றி பெற முடியும் என்ற சிந்தனை மேலோங்கியிருக்க கூறுகிறது.
அமைதியுள்ள மனம் வெற்றியை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. எந்த செயலிலும் உணர்ச்சி வசப்படாமல் அடியெடுத்து வைக்க கூறுகிறது. எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கும்போது, கையாள்வதை பற்றி கூறுகிறது. சாதிக்க உடல் ஒத்துழைப்பு தேவை என்பதால், உடல், மனதை சீராக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. வாழ்க்கையை கையாள பயிற்சி கொடுக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்