அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
நேர்மை தான் மூச்சு என ஐந்து கதைகள் போதிக்கின்றன. எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு; முடியாது என்பது முட்டாளின் வார்த்தை என மாவீரன் நெப்போலியன் போன்ற சிந்தனையின் பின்னணியில் அமைந்துள்ளது.
பள்ளியில் படிக்கும் காலத்திலே அறநெறிகளை கடைப்பிடித்து உயர்ந்தோரை எடுத்து கூறுகிறது. ஆசிரியரின் கடினமான உழைப்பை கருத்தாக புகட்டுகிறது. தீவிரவாதிகள் திருந்தியது எப்படி என கூறுகிறது. தொட்டில் குழந்தை திட்டம் எவ்வளவு பேருக்கு பயன்பட்டிருக்கிறது என அறியத்தருகிறது. இளைஞர்கள் படிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்