தமிழ் மொழி செவ்வியல் இலக்கியத்தை பண்பாட்டு நோக்கில் அணுகி ஆய்வு செய்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். கூர்மையாக அலசி கருத்துகளை முன்வைத்துள்ளது.
பழந்தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் உள்ள கருத்து கள் பண்பாட்டு நோக்கில் ஆராயப்பட்டுள்ளன. பழந் தமிழர் வசித்த பகுதிகளில் கொண்டாடப்பட்ட திருவிழாக் கள், கடைப்பிடிக்கப்பட்ட சடங்குகள், நிகழ்த்தப்பட்ட கலைகள் பற்றிய விபரங்கள் ஆராயப்பட்டுள்ளன.
தமிழர் வாழ்ந்த சமூகத்தில் பாணர், விறலியர், கூத்தர்களின் ஆடல் பாடல் பற்றிய விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சடங்கு அடிப்படையில் தோன்றிய நம்பிக்கைகள் குறித்தும் தகவல்கள் உள்ளன. பழந்தமிழர் வாழ்க்கையை ஆராய்ந்து கருத்துகளை முன்வைக்கும் நுால்.
– ஒளி