ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்த மத ஞானியர் கருத்துகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
உலகில் உண்மை மட்டும் உறுதியாக நிற்கும் என்கிறது. போற்றினாலும், துாற்றினாலும் நடுநிலைமையுடன் இருக்க அறிவுரைக்கிறது. வாய்க்கு காவல் அவசியம் என்கிறது. நாவை அடக்குவது தான் உண்மையில் நலம் பயக்கும் என்கிறது.
உற்றார் உறவினர் கைவிடலாம்; ஆனால், செய்த தானமும் தர்மமும் கூடவே வரும் என்ற கருத்தை அறிவுறுத்துகிறது. பூவை விரும்பினால் பறிப்பீர்; ஆனால், பூவின் மீது அன்பு வைத்தால் அந்த செடிக்கு தண்ணீர் விடுவீர் என்ற புத்தர் வாக்கை அறியத்தருகிறது. அவ்வப்போது படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்