பாண்டியர் தலைநகரான கொற்கையின் பண்பாட்டு சூழல்களை மையப்படுத்திய வரலாற்று நாவல்.
பாண்டிய மன்னன் முத்துவேல் கோமான், முத்து வணிகர் முத்தணிகண்டர், ஏனாதி, சதுரன், அமலை என்ற கதாபாத்திரங்களை சுற்றி செங்கோலாட்சி, வணிக சிறப்பு, துறைமுக கட்டமைப்பு, நாட்டுவளம் போன்றவை உரையாடலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தென்மதுரை, கபாடபுரம், கொற்கை நகர செய்திகளுடன் அந்த கால வளர்ச்சியை சித்தரிக்கிறது. கதைமாந்தர், காட்சியமைப்புகள் வரலாற்று தகவல்களுடன் பின்னப்பட்டுள்ளன.
கடல்கோள் நிலை, முத்துக்குளியல், மீன்பிடித்துறை, உப்பு வணிகம், சுங்கச்சாவடி, பண்டக சாலையை சுற்றி நாடகப்பாங்கில் நகர்கிறது. கொற்கை துறைமுகத்தை கண்முன் காட்டும் வரலாற்று நாவல்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு