நெஞ்சில் நீக்கமற நிறைந்துள்ள உன்னத மனிதர்கள் பற்றிய அபிப் பிராயங்களை தெரிவிக்கும் நுால்.
தன் மனைவி, மகளின் உயர்ந்த குணம் உள்ளபடி பதிவு செய்யப்பட்டுள்ளது. காந்திஜி, நேரு ஏற்படுத்திய தாக்கத்தை உணர வைக்கிறது. தனக்கு கருப்புக் கொடி காட்ட வந்தோருக்கு, நேரு தனி இடம் ஒதுக்கி, கண்ணியத்து டன் ஏற்ற மாண்பை அறிய வைக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் பெருமையும் பேசப்பட்டுள்ளது.
வங்கதேச யுத்தத்தில் அமெரிக்க அச்சுறுத்தலை இந்திரா எப்படி எதிர்கொண்டார், ரஷ்யாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நட்புறவு, வங்கப் போரில் அடைந்த வெற்றி என செய்திகள் அற்புதமாய் உரைக்கப்பட்டுள்ளன. பாராட்டும் குணமே நல்ல மாந்தர்க்கு அழகு என உணர்த்தும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்