திருமால் அவதாரத்தின் சிறப்பை மரபு நெறி மாறாது தந்துள்ள பக்தி பாசுரங்களின் பாமாலை நுால்.
ஜாதி, மதம் என்ற பேதமற்ற நிலையை மேம்படுத்தும் சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. குறள் வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா என இலக்கணப்படி பாடப்பட்டுள்ளன. உடையவர் குரு வணக்கத்தில், ‘ஜாதி, மத பேதம் எல்லாம் சாடித்தான் சென்றானே, அவன் தான் அனந்தனின் அவதாரம்’ என குறிப்பிடுகிறது.
கச்சி வரதனை அன்புடன் வணங்க, 100 திருமால் திருவந்தாதிகள் தரப்பட்டுள்ளன. தாழிசையில், ‘காவிரி நடுவினில் கண்வளர் அழகன் அரங்கன் வாழியே...’ என தாலாட்டு பாடுகிறது. திருமாலுக்கு புகழ் சூட்டும் பாமாலை நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்