முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு உள்ளிட்ட வழக்குகளின் தீர்ப்புகளை தொகுத்து தந்துள்ள நுால்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் காட்டுச் சூழல், தேடுதல் வேட்டை, போலீஸ் அத்துமீறல்கள் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. காவல் துறை அதிகாரி தேவாரம், மோகன் நிவாஸ் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. ‘நக்கீரன்’ பத்திரிகை மீது அரசு மேற்கொண்ட அடக்குமுறையையும் பட்டியலிடுகிறது.
காட்டில் வசிக்கும் அப்பாவி மக்களுக்கு காவல் துறையால் ஏற்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நேர்காணலும் தரப்பட்டுள்ளன. வழக்கு களின் தீர்ப்பு சுருக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியல் நிகழ்வுகள், தண்டனைகளை அறிய தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு