ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சொல்லும் கருத்தை புரிந்து வாழலாம் என வழி காட்டும் நுால். நற்பண்புகளை சொல்கிறது.
தெய்வ நோக்கில் செய்யும் நன்மைகள் புண்ணியம். மனித நோக்கில் செய்யும் தீமைகள் பாவம். ஆணவம், கன்மம், மாயை, பாவம், புண்ணியம், அனுபவம், அமுதம், விஷம் பற்றி தெளிவுற விளக்கப்பட்டுள்ளது.
மனமே பாற்கடல், மலையே பக்தி, கயிறான பாம்பு எண்ணங்கள், நஞ்சு தீயவை, அமுதம் சாகாவரம் என உருவகம் செய்கிறது. அதர்மத்தை கண்டும் காணாததுபோல் இருப்பவன் பார்வையற்றவன்; அநீதியை கேட்காதது போல் இருப்பது செவித்திறனற்ற நிலை என குறிப்பிடுகிறது. இதிகாச வழியில் சிறப்புடன் வாழ வழிகாட்டும் அருமை நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்