உலகம் முழுதும் அன்றாட நிகழ்வுகளை உற்றுநோக்கி எண்ணத்தை கருத்துப்படங்கள் வழியாக வெளிப் படுத்தும் நுால். புதுவை பாரதி இதழில் வெளியான கார்டூன்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.
உலகில் அன்றாடம் விவாதத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அதன் மீது கருத்து சொல்லும் வகையில் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அதிகமாக வரி விதித்ததை விமர்சிக்கும் வகையிலும் உள்ளது.
ஆயுதங்களை குவிப்பதால் உலகுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை உணர்த்தும் படங்களும் உள்ளன. அரசு முடிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்படங்கள் உள்ளன. அன்றாட நடப்புகள் மீது கருத்தை வெளிப்படுத்தி சுட்டிக்காட்டும் கார்டூன்களின் தொகுப்பு நுால்.
– ராம்