இலங்கை திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோவில் சிறப்பம்சங்களை தெரிவிக்கும் நுால். சரணாகதி உணர்வுடன் அம்பாளை வழிபட வழிகாட்டுகிறது.
நாராயணி, ஈசானி, நித்யை, சத்யை, அம்பை, வைஷ்ணவி, கவுரி, பார்வதி, சக்தி, சண்டிகை என அம்பாளின் பெயர்களுக்கு பொருள் கூறுகிறது. பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், அம்பாளின் சொரூபமான காளியை தரிசித்த விதம் குறித்து கூறுகிறது.
அடியார்கள் நொந்தாலும், இகழ்ந்தாலும், துாற்றினாலும் அம்பாள் அருள் செய்வாள் என்பதை ஒரு நிகழ்ச்சி வழியாக அறியத்தருகிறது. ஏகாதசி விரதமிருந்த ஏழைப் பெண்ணுக்கு அருளியதை கூறுகிறது. அம்பாள் பக்தர்கள் படிக்க வேண்டிய நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து