இஸ்லாமிய சமூக பின்னணியுடன் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
அயல்நாட்டில் வேலை செய்யும் போது, விடுமுறைக்கான போராட்டத்தை, ‘பெருநாள்’ கதை பேசுகிறது. உணவை வீணடிப்போருக்கு உழைப்பின் அருமை தெரியாது என, ‘நீரும் சோறும்’ கதை புரிய வைக்கிறது. சாலையோர பெண் வியாபாரிக்கு உதவும் நல்ல மனதை பகிர்ந்து, பொய் பிரசாரத்திற்கு சாட்டையடி கொடுக்கிறது.
முதியோர் இல்லத்தில் உறவினரை சேர்ப்பதால் ஏற்படும் தவிப்பை உணர்த்துகிறது ஒரு கதை. தாய், மகன் உறவை, ‘அம்மாவின் துப்பட்டி’ கதை பாசமாக பொழிகிறது. வெளிநாட்டில் சம்பாதித்தாலும் மன உளைச்சலில் பரிதவிப்போர் பற்றி எடுத்துரைக்கிறது. இஸ்லாமிய சமூக வாழ்வை மையமாக உடைய கதைகளின் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்