வாழ்க்கைக்கு தேவையான கருத்துகள் எளிய நடையில் பதிவாகியுள்ள நுால்.
கோவில் கோபுர கலசங்கள் பற்றிய விபரம், சப்த கன்னியர் வழிபாடு, குருவின் மகிமை போன்ற தலைப்புகளில் இறைவன் அருள் குறித்த கருத்துகள் குறிப்பிடத்தக்கதாக உள்ளன. கார்த்திகேயன் என இறைவன் முருகனுக்கு பெயர் வந்த விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டியது.
நாகதோஷ பரிகார தலங்களுக்கு சென்று தரிசிப்பதால் ஏற்படும் பலன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. காளகஸ்தி, குடந்தை, வில்லிவாக்கம், ஸ்ரீபெரும்புதுார், பேரையூர், திருச்செங்கோடு தலங்கள் பற்றி சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. கவலையை மறக்க கடவுள் தந்த வரம் தான் துாக்கம் என்ற அற்புத கருத்துகளை உடைய ஆன்மிக நுால்.
– சீத்தலைச் சாத்தன்