பொது வாழ்வில் முறைகேடுகளை நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் நுால். கட்டுரை துணுக்குகள், கதைகள் இயல்பான உரையாடல்களோடு எளிய நடையில் அமைந்துள்ளன.
சின்ன சின்ன அனுபவங்கள் கூட நையாண்டி தெறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. சாமானியர், அதிகார வர்க்கத்தினர், வணிகர், ஆட்சியாளர், வழிப்போக்கர், அப்பாவி என பல தரப்பினரை உள்ளடக்கிய அனுபவங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரயில் பயணச்சீட்டில் முறைகேடு, அரசு அலுவலகத்தில் லஞ்சம், சிறை நிர்வாகம், நீதிமன்ற நடப்பு என பலவற்றிலும் உள்ள பிரச்னைகளை அலசி ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. சமூக அக்கறை மேலோங்க எழுதப்பட்ட தொகுப்பு நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு