மகாபாரதத்தை ஆய்வு நோக்கில் அணுகி பதில் கூறும் வகையிலான நுால்.
மகாபாரதம் கற்பனை கதையா, உண்மை வரலாறா என்ற கேள்விக்கு, சங்க நுால்களான பெரும்பாணாற்றுப்படை, புறநானுாறு, சிலப்பதிகாரம் மற்றும் செப்பேடு சான்றுகள் தந்து விளக்குகிறது.
பாண்டவருக்காக போராடி வீர மரணம் அடைந்த மலையத்துவ பாண்டியன் பற்றி குறிப்பிடுகிறது. தர்மர் வென்று முடிசூடி ஆட்சி செய்ததை விளக்குகிறது.
துவாரகை அழிந்ததில் விஞ்சிய அரண்மனை, கடலுக்கு அடியில் உள்ளதை ஆய்வு தகவல்கள் வழியாக காட்டுகிறது. வியாசர் எழுதிய நிஜ மகாபாரத கதையை தமிழில் வில்லிபாரதமும், வேறு இலக்கியங்களும் மாற்றி, கற்பனை நிழலில் நிற்க வைத்து விட்டதாக தெரிவிக்கிறது. வியாசரின் மகாபாரத கதையை கூறும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்