உடலுக்கு ஏற்ற உணவு முறைகளைக் கூறும் நுால். டயட் ஓர் அறிமுகம் என துவங்கி, ‘கிளீன் ஈட்டிங் டயட்’ வரை, 25 கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது.
விரதமிருக்கும் முறை, ரா புட் டயட், வேகன் டயட், ரத்த வகை டயட், ஜி.எம்.டயட், லோ பேட் டயட், சோடியம் குறைந்த டயட் என விதவிதமான உணவு முறைகள் பற்றி உரைக்கிறது. உணவே மருந்து என்ற அடிப்படையில் அமைந்த உணவுகளே நோய் வராமல் தடுக்கும் என தெளிவாக்குகிறது.
உலக நாடுகள் கடைப்பிடிக்கும் உணவு முறைகளை தெரிவிக்கிறது. ஒவ்வொரு உணவின் வரலாறு, நிறை குறை, பின்பற்றும் வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யார் எந்த வகை உணவு முறையை பின்பற்றலாம் என்ற ஆலோசனையும் தருகிறது. ஆரோக்கியமாக வாழ விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நுால்.
– புலவர் ரா.நாராயணன்