மொழி சார்ந்த சொற்பொழிவுகளின் தொகுப்பு நுால்.
மொழியியல் பற்றிய விளக்கம் தந்து தமிழ் மொழிக்கும், இலக்கிய மேம்பாட்டுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துகிறது. மொழியியலும், இலக்கணமும் ஒருங்கிணையும் புள்ளிகளை தொடர்புபடுத்தி கருத்தை முன்வைக்கிறது. ஆராய்ச்சிகளை ஒப்பிட்டு நோக்க உதவுகிறது. ஆய்வு போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்த்துகிறது.
தமிழ் மொழி, சமுதாய வளர்ச்சிக்கான ஆய்வு பங்களிப்புகளை சுட்டிக் காட்டுகிறது. தொல்காப்பியத்துக்குப் பின் தோன்றிய இலக்கண நுால்கள் பற்றிய கருத்தோட்டங்களை எடுத்துக் கூறுகிறது. மொழி வரலாற்றை விரிவாக அறிந்திருந்தால் மட்டுமே ஆராய்ச்சிகளை முழுமையாக செய்ய முடியும் என வலியுறுத்துகிறது. மொழி ஆய்வாளர்களுக்கு உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு