வட அமெரிக்கா – இந்தியாவில் வாழும் சமூக மக்களின் பண்பாட்டு அடையாளங்களை ஒப்பிட்டுள்ள நுால்.
மானுடவியல் கோட்பாடுகள் வழியாக ஆய்வு செய்து கருத்துகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. அரசியல் நிலை குறித்தும் விரிவான தகவல்கள் உள்ளன. பல்வேறு பண்பாட்டு கூறுகள் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளன. வெவ்வேறு சூழல்களில் வாழும் மக்களின் அடையாளம் குறித்து விவரிக்கிறது.
மானுடவியல் கண்ணோட்டத்தில் பெண்கள் மேம்பாட்டு கருத்துகளில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இன்றைய அரசியல் நிலை குறித்த விவாதம், விமர்சனப்பூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் செயல்பாடு, பண்பாட்டு ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. சமூக கட்டமைப்பில் அதிகாரம் குறித்த தகவல்களும் தரும் நுால்.
– ராம்