குடும்பம், நண்பர்கள், உறவுகள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு கூறும் நுால்.
மாறுபட்ட குடும்ப வழக்கங்களில், மாற்று ஜாதி, மதத்தை சேர்ந்தோர் இணையும் போது ஏற்படும் சிரமங்கள், மாற்றங்களை அலசுகிறது. விரும்பிய அனைவருக்கும் காதல் நிறைவேறியதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
குடும்பத்தில் பெண்களின் பங்கு, சகிப்புத்தன்மை, விட்டு கொடுத்தல் போன்ற குணாதிசயங்களை எடுத்துரைக்கிறது.
குறை மட்டுமே கண்டு சுயநலமாக வாழும் உறவினர்களிடம் இருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது என்கிறது.
தம்பதிக்குள் வேலை பகிர்வு, வரவு – செலவு திட்டமிடல், வெளிப்படைத் தன்மை போன்றவையே, வாழ்வை சிறப்பாக அமைக்க உதவும் என்கிறது. மேம்படுத்தப்பட்ட வாழ்வு முறைக்கு ஆலோசனை தரும் நுால்.
– டி.எஸ்.ராயன்